நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ரசிகர்கள் அதிர்ச்சி

By Parthiban.A Apr 12, 2024 11:00 AM GMT
Report

நடிகர் சாயாஜி ஷிண்டே பாரதி படத்தில் சுப்ரமணிய பாரதியாராக நடித்து அதிகம் பிரபலம் ஆனவர். அதன் பிறகு ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திர ரோல்கள் என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார்.

நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ரசிகர்கள் அதிர்ச்சி | Sayaji Shinde Admitted In Hospital Chest Pain

நெஞ்சு வலி

இந்நிலையில் நேற்று நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அவரது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதை நீக்க angioplasty சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US