சூர்யாவுடன் இணைந்து நடிக்க நடிகை சாயீஷா வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா..
நடிகை சயீஷா
தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் வனமகன். இப்படத்தி மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சயீஷா.
இப்படத்திற்கு பின் விஜய் சேதுபதியுடன் ஜூங்கா, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், ஆர்யாவுடன் கஜினிகாந்த் என பல படங்களில் நடித்து வந்தார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த காதல் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை கடந்த ஆண்டு பிறந்தது.சயீஷாவின் திரைப்பயணத்தில் அவர் இணைந்து நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா.
ஆம், நடிகர் சூர்யாவுடன் இணைந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த காப்பான் திரைப்படம் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை சயீஷா.
சயீஷா வாங்கிய சம்பளம்
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 75 லட்சம் நடிகை சயீஷா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டேடி படத்தை தொடர்ந்து நடிக்காமல் இருக்கும் சயீஷா, விரைவில் நடிக்க வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகார குவியலால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு; மாநில அரசுக்கு ரத்த சோகை - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
