நேராக சென்று பெண் கேட்ட ஆர்யா.. சாயிஷாவிடம் சொல்லவே இல்லையா? - மாமியார் போட்டுடைத்த உண்மை
நடிகர் ஆர்யா 38 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்து அதன் பிறகு தான் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார். ஆர்யாவுக்கு பெண் தேட ஒரு பெரிய டிவி நிகழ்ச்சியே நடத்தப்பட்டது என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தான். அந்த ஷோ மூலமாக பாப்புலர் ஆனவர் தான் நடிகை அபர்ணதி.
ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் கஜினிகாந்த் என்ற படத்தில் முதலில் ஜோடியாக நடித்தனர்.
நேராக சென்று பெண் கேட்ட ஆர்யா
இந்நிலையில் கஜினிகாந்த் படம் வெளியாகி 6 வருடங்கள் ஆவதை பற்றி சாயிஷாவின் அம்மா பேசி இருக்கிறார்.
"6 வருடத்திற்கு முன் கஜினிகாந்த் படத்தில் தான் ஆர்யா, சாயிஷா ஒன்றாக நடித்தார்கள். அவர்களது திருமணம் காதல் திருமணம் அல்ல. அந்த படம் முடிந்தபிறகு ஆர்யா வந்து திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண் கேட்டார். அதற்கு பிறகு தான் அவர்களுக்குள் காதல் வந்தது."
"அப்போது Yes சொன்னதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்" என சாயிஷாவின் அம்மா ஷாஹீன் கூறி இருக்கிறார்.

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
