பிரபல ஹாலிவுட் நடிகை Scarlett Johansson-னுக்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்

baby Scarlett Johansson colin jost black widow
By Kathick Aug 21, 2021 08:20 AM GMT
Report

உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கக்கூடிய நட்சத்திரங்களில் ஒருவர் ஹாலிவுட் நடிகை Scarlett Johansson.

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான இவர், Lucy, captain america, Avengers படங்கள் மூலம் இந்திய ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் Black widow எனும் திரைப்படம் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்து வருகிறது.

நடிகை Scarlett Johansson இரண்டு முறை விவாகரத்து பெற்று, மூன்றாவது முறையாக, நகைச்சுவை நடிகரான காலின் ஜோஸ்டைக்கை காதலித்து 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த நடிகை Scarlett Johansson-னுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது குழந்தைக்கு காஸ்மோ என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த நடிகர் நடிகைகளும், ரசிகர்களும் Scarlett Johansson-னுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US