பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 16, 2026 03:00 AM GMT
Report

Scene movie 10 days Box office: சீன் திரைப்படம் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் சீன். ஜீது மாதவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான இப்படம் வெளியாகி இதுவரை 10 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், 10 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

Mr. Queen வெப் சீரிஸ் - சிறப்பு பார்வை

Mr. Queen வெப் சீரிஸ் - சிறப்பு பார்வை

கருப்பு - VAS - சீன்

சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால், இவர் எப்போது கம்பேக் கொடுப்பார் என்றே அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அப்படி எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வந்து அமைந்தது கருப்பு திரைப்படம். இந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் இதுவும் ஒன்று. மேலும், சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும்.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 10 Days Box Office

கருப்பு வெற்றியை தொடர்ந்து வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. பாக்ஸ் ஆபிஸில் தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் என தொடர் வெற்றிகளை பதிவு செய்த சூர்யா, அடுத்து சீன் திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 10 Days Box Office

அதன்படி, தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியான சீன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. ஹாட்ரிக் வெற்றி மட்டுமின்றி கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் சீன் என சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 3 திரைப்படங்களும் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

சீன் திரைப்படத்தின் வசூல்

சூர்யாவின் சீன் உலகெங்கும் வசூல் வேட்டையாடி வரும் நிலையில், 10 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சீன் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் ரூ. 250+ கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சீன் திரைப்படமும் ரூ. 250 கோடி என்கிற இலக்கை எட்டியுள்ளது. விரைவில் ரூ. 300 கோடியை தொடுகிறதா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 10 Days Box Office

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US