பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் இதுவரை சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ
Scene 13 days Tamil Nadu Box office: சீன் திரைப்படம் இந்த ஆண்டு சூர்யாவிற்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 13 நாட்கள் ஆன நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சீன்
ஜீது மாதவன் மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கிய ரோமஞ்சன், ஆவேசம் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து இவர் யாருடன் கைகோர்க்க போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், சீன் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.

சூர்யா - ஜீது மாதவன் கூட்டணியில் ஒரு திரைப்படமா! என ஆச்சரியத்துடன் ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ்நாடு வசூல்
இந்த நிலையில், சீன் திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 13 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 92 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படம் 13 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.