பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 15 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 21, 2026 05:17 AM GMT
Report

Scene movie 15 days box office: ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சீன் திரைப்படம் 15 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

சத்தியவான் சாவித்திரி திரை விமர்சனம்

சத்தியவான் சாவித்திரி திரை விமர்சனம்

சூர்யாவின் 2026

தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் எப்போது மீண்டும் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில், 2026 சூர்யாவின் வருடமாக மாறியுள்ளது. கருப்பு திரைப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் கம்பேக் கொடுத்தார். சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் இதுவே ஆகும்.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 15 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 15 Days Box Office

சீன் மூலம் ஹாட்ரிக் வெற்றி

கருப்பு வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இரண்டு தொடர் வெற்றி படங்களை கொடுத்த சூர்யா சீன் திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளி ஸ்பெஷல் திரைப்படமாக வெளியான சீன் திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 15 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 15 Days Box Office

15 நாட்கள் வசூல் விவரம்

சூர்யாவின் சீன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இதுவரை 15 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருந்தது. இந்நிலையில், 15 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 15 நாட்களில் உலகளவில் ரூ. 265 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 15 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 15 Days Box Office

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் 15 நாட்கள் வசூல் குறித்த விவரம் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US