பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 08, 2026 03:01 AM GMT
Report

Scene movie 2 days box office: சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் உருவாகி கடந்த 6-ஆம் தேதி வெளியான திரைப்படம் சீன். இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லன் நடித்துள்ளனர். தீபாவளி சிறப்பு திரைப்படமாக தமிழ் சினிமாவிலிருந்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 2 நாட்களில் உலகளவில் சீன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

Unknown Facts: நடிகர் கமல் ஹாசனை பற்றி வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள்

Unknown Facts: நடிகர் கமல் ஹாசனை பற்றி வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள்

சீன்

நடிகர் சூர்யா இந்த ஆண்டு தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் வரிசையில் சீன் திரைப்படத்திற்கும் மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத்தான் நாளும் சூர்யாவிடம் இருந்து எதிர்பார்த்தோம் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த ஆண்டு சூர்யாவின் கைவசம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 2 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ்

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிகவும் முக்கியம். அதை வைத்துதான் அப்படத்தின் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் சீன் திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 87+ கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளை விட இரண்டாவது நாளில் இப்படத்திற்கு வசூல் அதிகரித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 2 Days Box Office

200 கோடி பாக்ஸ் ஆபிஸ்

சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 335 கோடி வசூல் செய்தது. அதை தொடர்ந்து வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ரூ. 220 கோடி வசூலித்தது. இந்த இரண்டு திரைப்படங்களும் ரூ. 200 கோடி என்கிற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ள நிலையில், கண்டிப்பாக சீன் திரைப்படமும் ரூ. 200 கோடி என்கிற இலக்கை சாதாரணமாக தொட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 2 Days Box Office

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US