பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்
Scene Movie 2 days Tamil nadu box office: சூர்யா நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் சீன். 2 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம், உலகளவில் ரூ. 87+ கோடி வசூல் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சீன்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளன. இதில் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 335 கோடி வசூல் செய்து, சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

இரண்டு தொடர் வெற்றிக்கு பின், சூர்யா நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு வெளியாகியுள்ள திரைப்படம் சீன். மலையாள இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் முதல் முறையாக சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா, நஸ்லன் நடித்துள்ளனர். மேலும், ஆனந்த்ராஜ், லால், ராஜப்ரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதன் வெளிப்பாடாக நாளுக்கு நாள் சீன் திரைப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தமிழ்நாடு வசூல் விவரம்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சீன் திரைப்படம் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 2 நாட்களில் ரூ. 23 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.