Box Office: 21 நாட்களில் சீன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 27, 2026 06:19 AM GMT
Report

Scene movie 21 days box office: சீன் திரைப்படம் உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதனை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

Box Office: ஓம் திரைப்படம் ஒரு வாரத்தில் உலகளவில் செய்துள்ள வசூல்

Box Office: ஓம் திரைப்படம் ஒரு வாரத்தில் உலகளவில் செய்துள்ள வசூல்

சீன்

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்த ஜீது மாதவன் சீன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். முதல் தமிழ் திரைப்படத்திலேயே சூர்யாவை இயக்கி, அதில் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்திருக்கிறார்.

Box Office: 21 நாட்களில் சீன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 21 Days Box Office

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா, நஸ்லீன், ஆனந்த்ராஜ், லால் ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் பல சூப்பர்ஹிட் ஆல்பங்களை கொடுத்த சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் முதல் நாளிலிருந்தே இப்படத்தின் வசூல் பட்டையை கிளப்பி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இந்த நிலையில், 21 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள சீன் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 21 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 276 கோடி வசூல் செய்துள்ளது.

Box Office: 21 நாட்களில் சீன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 21 Days Box Office

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் 21 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல. நம் சினி உலகம் தரப்பில் இருந்து Track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US