பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் சீன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 09, 2026 03:03 AM GMT
Report

Scene movie 3 days worldwide Box office: சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படம் 3 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவிருந்த நடிகை ரெஜினா.. கையைவிட்டு போன திரைப்படம்

அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவிருந்த நடிகை ரெஜினா.. கையைவிட்டு போன திரைப்படம்

சீன்

மலையாளத்தில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஜீது மாதவன் இயக்கத்தில், The One சூர்யா நடிப்பில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் வெளியான திரைப்படம் சீன். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக நஸ்ரியா நடித்துள்ளார். இவர்களுடைய ஜோடி திரையில் மிகவும் அழகாக இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கூறினார்கள். மேலும், நடிகர் நஸ்லன் இப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும், ஆனந்த்ராஜ், லால், ராஜப்ரியன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் சீன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 3 Days Worldwide Box Office

ஹாட்ரிக் வெற்றி

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக சீன் திரைப்படம் வெளியானது. இதனால் ஒவ்வொரு திரையரங்கமும் சூர்யா ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திருவிழா கோலமாக மாறியது. மேலும், பொதுமக்களும் இப்படத்தை பார்த்துவிட்டு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். இதனால் கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் படங்களை தொடர்ந்து சீன் திரைப்படமும் மாபெரும் வெற்றியை நடிகர் சூர்யாவிற்கு தேடி தந்துள்ளது. இந்த வருடம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து தான் ஒரு OG என்பதை காட்டியுள்ளார் சூர்யா.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் சீன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 3 Days Worldwide Box Office

3 நாள் வசூல் விவரம்

கடந்த வாரம் திரைக்கு வந்த சீன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 3 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள சீன், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 123+ கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம், முதல் வாரத்தின் இறுதியில் கடும் போட்டியிலும் இவ்வளவு பெரிய வசூல் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் சீன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 3 Days Worldwide Box Office

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US