பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 10, 2026 05:00 AM GMT
Report

Scene movie 4 days worldwide Box office: சூர்யா நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான சீன் திரைப்படம் இதுவரை 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்நிலையில், இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா 5 நாட்கள் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா 5 நாட்கள் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்

சீன்

மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் ஜீது மாதவன் முதல் முறையாக சூர்யாவுடன் கைகோர்த்த திரைப்படம் சீன். இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லன், ஆனந்த்ராஜ், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளராக கொடிகட்டி பறக்கும் சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 4 Days Worldwide Box Office

சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று சீன். அதுவும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஏற்கனவே இந்த ஆண்டு கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், சீன் திரைப்படமும் ஹாட்ரிக் ஆக அமையும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்து, 2026-ல் சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றியை அளித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 4 Days Worldwide Box Office

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

சீன் திரைப்படம் முதல் நாளிலிருந்து எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 4 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 150+ கோடி வசூல் செய்துள்ளது. நான்கே நாட்களில் ரூ. 150 கோடியை தொட்டு சீன் சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Scene Movie 4 Days Worldwide Box Office

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; இவை நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வசூல் விவரங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US