பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
Scene movie 9 days worldwide box office: சூர்யாவின் சீன் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
சீன்
ஜீது மாதவன் மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கிய ரோமஞ்சன், ஆவேசம் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து இவர் யாருடன் கைகோர்க்க போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், சீன் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.

சூர்யா - ஜீது மாதவன் கூட்டணியில் ஒரு திரைப்படமா! என ஆச்சரியத்துடன் ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏற்கனவே இந்த ஆண்டு கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் Back to back மாபெரும் வெற்றியை தேடி தர, சீன் திரைப்படம் ஹாட்ரிக் அடிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை சீன் முழுமையாக பூர்த்தி செய்து வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
சீன் திரைப்படம் வெளியாகி 9 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் 240+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.