சீன் திரை விமர்சனம்

By Tony Nov 06, 2026 03:30 AM GMT
Report

சீன் திரை விமர்சனம்

சூர்யாவிற்கு இந்த ஆண்டு கொண்டாட்டம் தான், கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களை தொடர்ந்து ஜீது மாதவன் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் தான் சீன், இந்த படம் மூலம் சூர்யா ஹாட்ரிக் அடித்தாரா? பார்ப்போம்.

சீன் திரை விமர்சனம் | Scene Movie Review

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே நஸ்லான் எவ்ளோ பெரிய சைக்கோ என்பதற்கு லீட் கொடுத்து தொடங்குகின்றனர், அப்படியே கதை சூர்யா பக்கம் வருகிறது, தனக்கென ஒரு ரூல் போட்டு இஷ்டத்துக்கு போலிஸ் ஸ்டேஷனில் இருந்து வருகிறார் சூர்யா.

சில வருடங்களுக்கு முன்பு சூர்யா கண்டிபிடித்த சைக்கோ கொலையாளி ஒருவர் தற்போது சிறையில் உள்ளார், ஆனால் மறுபடியும் அதே பேட்டனில் கொலை நடக்கிறது.

சீன் திரை விமர்சனம் | Scene Movie Review

அதே நேரத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக சூர்யா வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுக்க, நஸ்லான் செய்யும் கொலை தொடர்கிறது.

சூர்யாவின் ஈகோவை இது சீண்டிகொண்டே இருக்க, தன் பிரச்சனைகாக நஸ்ரியாவை கூடையே வைத்துகொண்டு, தன் அப்பா, அம்மாவை மீண்டும் தன் வீட்டிற்கு வர வைத்து நஸ்லானை பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சூர்யா மனுஷன் பீக் புடிச்சுடார்னு சொல்ற மாதிரி பின்னி பெடல் பெர்ப்பாமன்ஸ் தான், அதிலும் தன் பிரச்சனை அறிந்து நஸ்ரியாவுடன் கைகோர்த்து அவர் செய்யும் வேலைகள் அட்டகாசம், அதிலும் செகண்ட் ஆப்-ல் நஸ்லானை சந்திக்கும் இடம் பட்டாசு.

நஸ்லான் தமிழ் சினிமாவிற்கு செம எண்ட்ரி, கலக்கிவிட்டார், 100-க்கு மேற்பட்ட கொலை செய்த சைக்கோ அதிலும் இண்டலிஜண்ட் சைக்கோவாக தன் அலட்டலே இல்லாத நடிப்பில் அடி தூள் செய்துவிட்டார்.

சீன் திரை விமர்சனம் | Scene Movie Review

நஸ்ரியா ஆரம்பத்தில் அவர் வரும் காட்சிகள் தான் கொஞ்சம் போர் என்றாலும் இரண்டாம் பாதி செம கம்பேக் கொடுக்கிறார், இவர்களை தவிற மனநிலை சரியில்லாத அப்பாவாக ஆனந்த் ராஜ், குடிகார அம்மா, போலிஸ் ஆபிஸர்கள் ராஜ் பிரியன், வினோத் ஆக நடித்தவர் எல்லாமே சிறப்பு.

படத்தின் முதல் பாதி நஸ்லான் கதை நீட் ஆக சென்றாலும் சூர்யா எதை நோக்கி செல்கிறார் என்ற தெரியவில்லை, கொஞ்சம் குழப்பமாக செல்ல, நஸ்ரியா வந்ததும் அட என்ன தாங்க சொல்ல வறீங்க, மாட்டிகிட்டோமா என நினைத்த நிலையில் இண்டர்வெல் கொஞ்சம் நிமிர வைக்கிறது.

சீன் திரை விமர்சனம் | Scene Movie Review

அதன் பிறகு சூர்யா வெஸ் நஸ்லான் ஒன் டூ ஒன் கேட் அண்ட் மவுஸ் கேம் சரவெடி தான், ஜீது மாதவன் அவருக்கு உரிய ஸ்டைலில் நஸ்ரியா கை நடுங்கி தண்ணி குடிக்க, சூர்யா அம்மா கை நடுங்கி சரக்கு அடிக்க என அவர் டச் படம் முழுவதும் உள்ளது. டெக்னிக்கல் விஷமாக பார்த்தால் கண்டிப்பாக ஒளிப்பதிவு கலக்கல், அதை விட சுஷின் பேக்ரவுன் மியூஸிக் செம பலம்.

க்ளாப்ஸ்

சூர்யா பெர்ப்பாமன்ஸ் டாப் க்ளாஸ் நஸ்லான் அலட்டல் இல்லாத நடிப்பு செகண்ட் ஆப் டெக்னிக்கல் ஒர்க்

பல்ப்ஸ்

முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.

மொத்தத்தில் இந்த தீபாவளி சீன் தீபாவளி தான்

3/5

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US