பாக்ஸ் ஆபிஸ்: மூன்று வார முடிவில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 23, 2026 06:17 AM GMT
Report

Scene movie three weeks box office: சூர்யா நடிப்பில் வெளியான சீன் திரைப்படம் மூன்று வாரங்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

சீன்

மலையாள இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் சீன். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா முதல் முறையாக நடித்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: மூன்று வார முடிவில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் | Scene Movie Three Weeks Box Office

மேலும், வில்லனாக அனைவரையும் மிரட்டியிருந்தார் நடிகர் நஸ்லன். இவர்களுடன் ஆனந்த்ராஜ், லால், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த நவம்பர் 6-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து மூன்று வாரங்களை வெற்றிகரமாக கடந்திருந்தது.

மூன்று வார வசூல் விவரம்

இந்த நிலையில், மூன்று வாரத்தில் சீன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 270+ கோடி வசூல் செய்துள்ளது. ரூ. 300 கோடி என்கிற இலக்கை எட்டி சீன் திரைப்படம் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அப்படி நடந்தால், கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து இப்படமும் ரூ. 300 கோடி கிளப்பில் இணையும். இதன் மூலம் ஒரே ஆண்டில் ரூ. 300 கோடி வசூலித்த இரண்டு திரைப்படங்களை கொடுத்த நடிகர் என்றும் சாதனை படைப்பார் சூர்யா.

பாக்ஸ் ஆபிஸ்: மூன்று வார முடிவில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் | Scene Movie Three Weeks Box Office

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் மூன்று வார வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US