Box Office: சீன் திரைப்படம் 22 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
Scene movie worldwide 22 days box office: சீன் திரைப்படம் வெளியாகி 22 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
சீன்
திரையில் பல வருடங்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜோடி சூர்யா - நஸ்ரியா. இவர்கள் இருவரும் ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாகும் படத்தில் இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவான சீன் திரைப்படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு வெளியான சீன் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி மட்டுமின்றி கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் வெற்றியடைந்ததால், சூர்யா ரசிகர்கள் ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
22 நாட்கள் வசூல்
சீன் திரைப்படத்தின் வசூல் விவரங்களை ஒவ்வொரு நாளும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 22 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 22 நாட்களில் உலகளவில் சீன் திரைப்படம் ரூ. 278 கோடி வசூல் செய்துள்ளது.

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் 22 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினி உலகம் தரப்பில் track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.