அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் குள்ளமாக நடித்தது இப்படித்தான்.. வெளிவந்த ரகசியம்
கடந்த 1989ஆம் ஆண்டு சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் அபூர்வ சகோதரர்கள்.
இப்படத்தில் நடிகர் கமல் ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதுவும், குள்ளமாக அவர் நடித்திருந்தது, இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.
ஆனால், இது எப்படி சாத்தியமானது. கமல் எப்படி குள்ளமாக நடித்தார் என்பதை பற்றி இன்று வரை பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கமல் குள்ளமாக நடிக்க பொழுது, கமல் ஹாசனின் கால்களை குழி தோண்டி தரைக்கு அடியில் புதைத்து விடுவார்களாம்.
அதன்பின், அவர் கால்களில் அணியும் ஷூவை ஒட்டி வைத்து விடுவார்களாம். இதன்முலம் அவர் குள்ளமான தோற்றத்தில் தெரிவாராம். இந்த டெக்கினிகை வைத்த பல காட்சிகளை எடுத்தாலும், இன்னும் பல காட்சிகளில் கமல் தனது கால்களை மடக்கி வைத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
