லாஸ்லியா உடன் காதல் என்ன ஆச்சு? முதல்முறையாக அறிவித்த கவின்
பிக் பாஸ் புகழ் கவின் லாஸ்லியா விவகாரம் எல்லோருக்கும் தெரியும். பிக் பாஸ் வீட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்த அவர்கள் வெளியில் வந்ததும் பிரிந்துவிட்டனர். ஆனால் பிரேக்கப் பற்றி அவர்கள் வெளிப்படையாக இதுவரை வெளிப்படையாக பேசியது இல்லை.
இந்நிலையில் கவின் தற்போது தான் சிங்கிள் என்பதை அறிவித்து இருக்கிறார். காதல் பற்றி அவர் என்ன கூறியுள்ளார் பாருங்க..
"காதல் என்பது பற்றி ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு புரிதல் இருந்திருக்கிறது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் உண்மையாக நேசிக்கிற விஷயம் அல்லது ஆளுக்காக நாம் கடைசி வரை உண்மையாக இருக்க வேண்டும்."
"எவ்வளவு தூரம் போக வேண்டும் என்றாலும் அதற்காக போக வேண்டும். அப்படிப்பட்ட உண்மையான காதலை இன்னும் நான் தற்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஒரு நாள் என்றைக்காவது அப்படி ஒரு விஷயம் அமையும். சந்தோசமாக ஒரு வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன்."
"நான் என் வேலையையும் காதலிக்கிறேன். அது தான் கடைசி வரை சோறு போட போகிறது" என கவின் கூறியுள்ளார்.
உண்மையான காதலை தேடிக்கொண்டிருக்கிறேன் என கவின் கூறியதால் அவர் லாஸ்லியா உடன் பிரேக்கப் ஆகி தற்போது அவர் சிங்கிள் தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.