வாரிசு படத்திற்கு சிக்கல்.. தெலுங்கு படங்களை இங்கே விடமாட்டோம்! - சீமான் கண்டனம்
வாரிசு
விஜய்யின் வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருந்தது.
பொங்கல் ரிலீஸில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை, மற்ற மொழி டப்பிங் படங்களுக்கு மிச்சம் இருக்கும் தியேட்டர்கள் தான் தரப்படவேண்டும் என ஒரு அறிக்கை TFPC வெளியிட்டது. இதனால் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்தது.
சீமான் கண்டனம்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த முடிவை தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் என கூறி இருக்கிறார்.
"இது விஜய் எனும் ஒரு நடிகருக்கு எதிராக எழுந்திருக்கும் சிக்கல் அல்ல, ஒட்டுமொத்த தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிராக கொடுக்கப்படும் நெருக்கடி. விஜய் படத்திற்கே இந்த நிலை என்றால், மற்ற படங்கள் என்னவாகும்" என சீமான் கேட்டிருக்கிறார்.
தீடீரென நின்று போன ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு.. காரணம் இதுதான்