அது வேற வாய்! இது நாற வாய்! பொங்கியெழுந்த விஜய் ரசிகர்கள்! ஊர் முழுக்க பரப்பு!
விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகம். சமூக வலைதளத்தில் மிகவும் திரளான எண்ணிக்கையில் கூடியிருக்கிறார். விஜய்யின் படம் சம்மந்தப்பட்ட வீடியோக்களை கொண்டு ட்ரெண்டிங்கில் புதுப்புது சாதனை படைக்க வைக்கிறார்கள்.
விஜய் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கும் அவரின் அப்பாவுக்கும் அண்மையில் கருத்து வேறுபாடு நிலவ, விஜய் அதிரடி அறிக்கை வெளியிட்டு எனக்கும் என் அப்பா தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரசிகர்கள் யாரும் அதில் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டாம், என் அனுமதி இல்லாமல் புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறிவிட்டார்.
ஏற்கனவே சீமான் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் என கூறியிருந்தார். என் தம்பி விஜய் என்றெல்லாம் அரிதாரமாக பேசி வந்தார்.
அண்மையில் செய்தியாளர்களிடத்தில் ரஜினி, கமலை அடிக்கின்ற அடியில் விஜய் உட்பட எந்த நடிகரும் இனி அரசியலுக்கு வரக்கூடாது என கூறியிருந்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சீமானுக்கு எதிராக தேனியில் போஸ்டர் ஒட்டியும், சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.