வேட்டையன் படம் பற்றி பதிவிட்ட சீமான்.. என்ன கூறி இருக்கிறார் பாருங்க
TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.
இருப்பினும் படத்திற்கு நல்ல வசூலும் பாக்ஸ் ஆபிசில் கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இரண்டே நாளில் 41 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
சீமான் பதிவு
இந்நிலையில் வேட்டையன் படம் பற்றி சீமான் பதிவிட்டு இருக்கிறார்.
"தம்பி ஞானவேல் தன்னுடைய நேர்த்தியான படைப்பின் மூலம் தான் சொல்ல நினைத்த கருத்தை மிக எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்."
"தம்முடைய கவர்ந்திழுக்கும் நடிப்பாற்றல் மூலம் ஆரம்பகால ரஜினியாக நம் மனதை ஆட்கொள்கிறார். அவருக்கு என்னுடைய அன்பும், வாழ்த்துகளும். அண்மையில் வெளிவந்த ரஜினிகாந்த் திரைப்படங்களிலேயே வேட்டையன் திரைப்படம் தனித்துவத்துடன் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கும் படைப்பாக அமைந்துள்ளது" என சீமான் பதிவிட்டு இருக்கிறார்.




திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
