கார் வரிவிலக்கு விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட சீமான்
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்க் குறைக்குமாறு நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால் அவர் அப்படி கேட்டது தவறு என நீதிமன்றம் அபராதம் விதித்தது. இதனால் விஜய்க்கு அவர் செய்தது தவறு இல்லை என பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் நடிகர் விஜய்க்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அன்பு தம்பி விஜய், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது. துணிந்து நில். இது அவதூறுதானே ஒழிய குற்றம் இல்லை.
தொடர்ந்து செல். ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு செல். பொதுவாக அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றம் செல்லமாட்டார்கள். உண்மையை உணராமல் வழக்கு தொடர்ந்த காரணத்திற்காக குற்றவாளி போல சித்தரிப்பதா?
ஒரு பொருளை வாங்கும் விற்பனை விலைக்கு இணையாக அரசுக்கு செலுத்த வரி விதிப்பது தவறு’ என்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ஏறு ஏறு ஏறு நெஞ்சில் தெரிவித்து ஏறு’ என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி என்று கூறியுள்ளார் உள்ளார்.