தர்மதுரை 2 படத்தை நான் இயக்கவில்லை.. ஷாக்கிங் தகவல் வெளியிட்ட இயக்குனர் சீனுராமசாமி
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தர்மதுரை.
இந்த படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். வெற்றிப்படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் பட்டியலில் தற்போது இந்தப்படமும் இடம் பிடித்துள்ளது.
ஆம்.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.
ஆனால், தர்மதுரை 2 படத்தை நான் இயக்கப்போவதில்லை என்று கூறி, இயக்குனர் சீனுராமசாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது," தர்மதுரை பாகம் இரண்டு எடுக்க போவதாக செய்திகள் வருகின்றன. வாழ்த்துக்கள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல.
ஆகவே அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் " என்று கூறியுள்ளார்.
தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 17, 2021
வாழ்த்துக்கள்.?
ஆனால்
அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள்
உண்மையல்ல.
ஆகவே அது சம்பந்தமான விசயத்தில்
எனக்கு எவ்வித சம்பந்தம்
இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்.
?
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri