ப்ளூ சட்டை மாறனுக்கு சீனு ராமசாமி பதிலடி! மாமனிதன் பட விமர்சனத்திற்க்கு விளக்கம்
விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட கால தாமதத்திற்கு பிறகு மாமனிதன் படம் இந்த வாரம் தான் திரைக்கு வந்தது. சீனு ராமசாமி இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இதை 'பெரிய திரையில் மெகா சீரியல்' என குறிப்பிட்டு இருந்தார். மாமனிதன் என டைட்டில் வைத்ததையும் அவர் தாக்கி பேசி இருந்தார்.
மேலும் இந்த படத்தில் வருவது போல எந்த அப்பாவாவது மகள் திருமணத்திற்கு நகை வாங்க மகள் இல்லாமல் தனியாக போவாரா என ப்ளூ சட்டை கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் இயக்குனர் சீனு ராமசாமி ட்விட் செய்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது..
"இனிய மாறா வணக்கம், உங்கள் விமர்சனத்திற்கு எனதன்பு. நகை ஆர்டர் குடுக்க மகளோடு போயிருக்கார் வாங்க தனியா போகலாம் இல்லையா?"
"மனிதனை கொல்லலாம், மாமனிதனை உங்களால் கொல்ல முடியாது" என அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இனிய மாறா
— R.Seenu Ramasamy (@seenuramasamy) June 25, 2022
வணக்கம்
உங்கள்
விமர்சனத்திற்கு எனதன்பு
நகை ஆர்டர் குடுக்க மகளோடு போயிருக்கார்
வாங்க தனியா போகலாம் இல்லையா?
மனிதனை கொல்லலாம்
மாமனிதனை
உங்களால் கொல்ல முடியாது @tamiltalkies
நன்றி...@VijaySethuOffl@thisisysr @studio9_suresh#Maamanithanhttps://t.co/UNRjFvJvSQ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
