சிறகடிக்க ஆசை: அருணிடம் முத்து மன்னிப்பு கேட்கணும்.. மீனாவிடம் சண்டை போடும் சீதா
சிறகடிக்க ஆசை
கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் பைக்கில் வேகமாக வந்த ஒருவன் தெருவில் நடந்துவந்த பெண் ஒருவரை இடித்துவிட்டு சென்றுவிட்டான்..
அவனை பிடிக்க அருண் செல்ல, அங்கு வந்த முத்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டார். இதனால் முத்துவிற்கு நல்ல பெயர் கிடைக்க, அங்கிருந்த மக்கள் போலீஸை குறை சொல்ல, அருணுக்கு சஸ்பென்ஷன் கிடைத்துவிட்டது.
மீனாவிடம் சண்டை போடும் சீதா
இதனால் கடுப்பான அருண், இதற்கெல்லாம் முத்துதான் காரணம் என சீதாவிடம் கூற, உடனடியாக மீனாவிடம் சென்று, முத்து இதற்காக அருணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்.
மீண்டும் அக்கா தங்கைக்கு இடையே இப்படியொரு சண்டை வருகிறது. ஆனால், முத்து மன்னிப்பு கேட்க மாட்டார், அவரே இதற்கு சரி என கூறினாலும், நான் கேட்க விடமாட்டேன் என மீனா கூறுகிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ப்ரோமோ வீடியோ இதோ: