வெளியானது கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் தேதி ! செம உற்சாகத்தில் ரசிகர்கள்
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கே.ஜி.எப்.
எந்தவித எதிர்பார்ப்புமின்றி வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை இந்தியளவில் செம பேமஸ் படமாக அறியப்பட்டது.
இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு எகிற தொடங்கியது, மேலும் சில மாதங்களுக்கு கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் டீசரும் வெளியாகி ட்ரெண்டானது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ் தற்போது தேதி மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் கே.ஜி.எப் 2 அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என மாஸ்ஸான போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இதே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தயாரிப்பில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri