செல்வராகவன் - தனுஷ் திரைப்படத்தில் நடிக்கும் பிகில் பட நடிகை! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் பல சிறந்த படைப்புக்களை தந்த கூட்டணிகளில் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி முக்கியமான ஒன்று.
இவர்கள் கூட்டணியில் இதுவரை காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே இவர்கள் கூட்டணியில் நான்காவதாக நானே வருவேன் என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. மேலும் இப்படத்தின் நானே வருவேன் என்ற டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.
ஆனால் இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் நானே வருவேன் தலைப்பில் எந்த ஒரு மாற்றமுமில்லை என்பதை அவரின் ட்விட்டர் பக்கத்தில் அப்படத்தின் ஹாஷ் டேக்கின் மூலம் மறைமுகமாக தெரிவித்து இருந்தார்.
மேலும் தற்போது இப்படத்தில் பிகில், மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை இந்துஜா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu