மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ள, தளபதி விஜய்யின் நிஜ வாழ்க்கை மாஸ் நிகழ்வு..!
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
கடந்த வருடமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, வரும் ஜனவரி 13 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
அதுமட்டுமின்றி 50% இருக்கைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அரசு அனுமதி உடன் 100% இருக்கைகளுடன் திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 8 அல்லது 10 நிமிடம் நெய்வேலியில், தளபதி விஜய் பஸ் மீது ஏறி ரசிகர்களுடன் எடுத்து கொண்ட செல்பி நிகழ்வை வைத்துள்ளார்களாம்.
மாஸ்டர் படம் அந்த நெய்வேலி செல்பி உடன் தான் முடியும் என மாஸ் தகவல் வெளியாகியுள்ளது.
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020