எதிர்மறையான எண்ணங்கள், எது நடந்தாலும்.. செல்வராகவன் கூறிய விஷயம் வைரல்
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக செல்வராகவன் இருக்கிறார். இவரை ஜீனியஸ் என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.
இன்று கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் தனுஷை சிறந்த நடிகராக உருவாக்கியதே இவர் தான்.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான இவர், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை என பல தலைசிறந்த திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அடிக்கடி படத்தின் அப்டேட்டுகள் மற்றும் ஒரு சில தகவல்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பார்.
விஷயம்
இந்நிலையில், எதிர்மறையான எண்ணங்களை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பது குறித்து அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "நம் வாழ்க்கையில் எதிர்மறையாக எது நடந்தாலும் கடவுளே அதை நீ பார்த்துகோள் என்று சொல்லி பழகுங்கள்.
அதனை கடவுள் பார்த்து கொள்ளுவார், பின்னர் நீங்கள் உங்கள் வேலைகளை பார்த்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில், இது உங்களுக்கு புரியாது. சில நாட்களுக்கு பின் உங்களுக்கு தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார்.