'தனிமையில் இருப்பதே பேரின்பம்'.. இயக்குனர் செல்வராகவனின் திடீர் பதிவு
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன்.
இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை இயக்கினார்.
தற்போது மீண்டும் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இயக்குனராக மட்டுமல்லாமல், சாணி காயிதம் மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சில கருத்துக்களை பதிவு செய்து வருவார்.
அந்த வகையில் தற்போது, "இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி." என்று பதிவு செய்துள்ளார்.
தீடீரென செல்வராகவன் இப்படி பதிவிட, என்ன காரணம் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கேட்டு வருகிறார்கள்.
இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி. ??
— selvaraghavan (@selvaraghavan) September 25, 2021

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
