செல்வராகவனின் இந்த கதையை பார்த்துதான், அவரின் மனைவி அவரை காதல் செய்தாராம் ! எந்த படத்தின் கதை தெரியுமா?

Wife Director Selvaragavan Kaanal Neer
By Balakumar Mar 19, 2021 05:34 PM GMT
Report

இயக்குனர் செல்வராகவன் தற்போது உள்ள தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர், இவர் படத்தை காண்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என பல திரைப்படங்கள் மிக சிறந்த படைப்புகளாக கருதப்படுகிறது.

மேலும் சூர்யாவை வைத்து இவர் இயக்கியிருந்த என்.ஜி.கே திரைப்படம் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டு பின்னர் படுதோல்வி அடைந்தது. இதனிடையே சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், செல்வராகவனின் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.  

இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2010ஆம் ஆண்டு செல்வராகவன் உருவாக்கி இருந்த கானல் நீர் என்ற கதையை படித்துதான் செல்வராகவன் மீது காதல் வயப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கானல் நீர் என்ற கதை தான் பின் 2013 ஆம் ஆண்டு ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US