சாப்பிடுவதற்கு சோறு கூட இருக்காது.. வறுமையில் வாடிய செல்வராகவனின் குடும்பம்
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக செல்வராகவன் இருக்கிறார். இவரை ஜீனியஸ் என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இன்று கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் தனுஷை சிறந்த நடிகராக உருவாக்கியதே இவர் தான்.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான இவர், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை என பல தலைசிறந்த திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
அடுத்ததாக 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தை இயங்கிக்கொண்டு இருக்கிறார். இயக்குநராக மட்டுமின்றி தற்போது நடிகராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வறுமையில் வாடிய குடும்பம்
இந்த நிலையில், தனது சிறு வயதில் தங்கள் குடும்பம் வறுமையில் எப்படி கஷ்ட்டப்பட்டது என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது "சின்ன வயசுல எங்களுக்கு வறுமை அதிகம். ஊர்ல இருந்து சென்னைக்கு எங்க அப்பா பிழைக்க தான் கூட்டிட்டு வந்தாரு. சாப்பிடுவதற்கு சோறு கூட இருக்காது. அப்போ நானும் என் சிஸ்டர் மட்டும் தான் இருந்தோம். எங்க அம்மா பக்கத்து வீட்ல, அப்பா வேலைக்கு போகணும் அதனால் டிரஸ்க்கு போட கஞ்சி குடுங்க என்று கேட்டு வாங்கிட்டு வந்து அதை எங்களுக்கு சாப்பிட கொடுப்பாங்க. அப்படி வறுமையோட முழு உருவத்தையும் பாத்துட்டு வந்தவங்க தான் நாங்க. இதில் வறுமையை பார்க்காம வந்தவர் தனுஷ். அவர் பிறக்கும்போது ஓரளவுக்கு செட்டில் ஆயிட்டோம்" என கூறியுள்ளார்.