தனுஷ் படம்.. இரண்டாவது முறையாக செல்வராகவன் செய்த முக்கிய மாற்றம்
தனுஷ் மற்றும் அவரது சகோதரர் இயக்குனர் செல்வராகவன் மீண்டும் கூட்டணி சேரும் படம் நானே வருவேன். அந்த படத்தில் ஒரு அதிரடி மாற்றத்தை செல்வராகவன் தற்போது செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த யாமினி தற்போது இந்த ப்ரொஜெக்ட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது அரவிந்த் கிருஷ்ணா ஒப்பந்தம் ஆக இருப்பதாக தாவல் வெளியாகி இருக்கிறது. சில்லுக்கருப்பட்டி புகழ் யாமினி இந்த படத்தின் இருந்து வெளியேற்றப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் தற்போது வெளிவரவில்லை.
ஒளிப்பதிவாளர் மாற்றப்படுவது இது இரண்டவது அரவிந்த் கிருஷ்ணா செல்வராகவன் உடன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறார். தற்போது அவர் நானே வருவேன் படத்தில் இணைந்தால் அது நான்காவது முறையாகும்.
புதுப்பேட்டை 2 படத்திலும் இதே கூட்டணி இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.