தனுஷ் விவாகரத்து பற்றி பல மாதங்கள் முன்பே சொன்ன செல்வராகவன்! இப்போது வைரலாகும் ட்விட்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பற்றி பல்வேறு விதமான தகவல்கள் தற்போது பரவ தொடங்கி இருக்கிறது. உண்மை, வதந்தி, கற்பனையான விஷயங்கள் என பல செய்திகள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவன் பதிவிட்ட ட்விட்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. தனிமையில் இருப்பதே பேரின்பம், அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க கூடாது என அட்வைஸ் செய்வது போல தான் அந்த ட்விட் இருக்கிறது.
செல்வராகவன் படங்கள் போல ட்விட்டும் லேட்டாக தான் புரிகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி. ??
— selvaraghavan (@selvaraghavan) September 25, 2021
வாழ்க்கையில் மிகக் கொடுமை“ என்ன பாத்துக்க யாருமே இல்லையே “” என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு “ஒருவர் ‘ பார்த்துக் கொள்ள வேண்டும் ? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல.! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல். !
— selvaraghavan (@selvaraghavan) January 4, 2022
`தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
— selvaraghavan (@selvaraghavan) December 3, 2021