எல்லா போட்டோக்களும் நீக்கம்.. இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்கிறாரா செல்வராகவன்?
இயக்குனராக பல முக்கிய படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்காக கொடுத்தவர் செல்வராகவன். அவர் தற்போது பேட்டி கொடுத்தாலும் எப்போது புதுப்பேட்டை 2 எடுப்பீங்க, எப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 எடுப்பீங்க என தான் கேள்விகள் கேட்பார்கள். தான் அதற்கான முயற்சியில் இருப்பதாக தான் அவர் எப்போதும் பதில் கூறுவார்.
செல்வராகவன் படங்களில் நடிப்பதில் தான் தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவரது நடிப்பும் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

போட்டோ நீக்கியது ஏன்?
இந்நிலையில் செல்வராகவனின் இரண்டாவது மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து செல்வராகவனின் போட்டோக்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார் என தகவல் பரவி வருகிறது.
இரண்டாவது மனனவியையும் அவர் விவாகரத்து செய்ய போகிறாரா என பரபரப்பாக இணையத்தில் பேச்சுகள் வர தொடங்கி இருக்கிறது. இருப்பினும் கீதாஞ்சலி இன்ஸ்டாவில் இன்னும் செல்வராகவனை follow செய்துகொண்டு தான் இருக்கிறார்.
விவாகரத்து செய்தி பற்றி செல்வராகவன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை.