ஓடிடி-யில் வெளிவரும் செல்வராகவனின் எதிர்பார்ப்புக்குரிய படம்.. எந்த படம் தெரியுமா
தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவருடைய இயக்கத்தில் தற்போது நானே வருவேன் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ஹீரோவாக தனுஷ் நடித்து வருகிறார். இயக்குனராக மட்டுமல்லாமல், அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள, சாணி காயிதம் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார் செல்வராகவன்.
இதனை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் நடித்து வருகிறார்.
செல்வராகவன் நடிகராக அறிமுகமாகவுள்ள, சாணி காயிதம் படத்தில் அவருடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம், நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது.
மேலும் தற்போது, இப்படம் அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.