19 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2 .. அதிரடி அப்டேட்
7ஜி ரெயின்போ காலனி
செல்வராகவன் இயக்கத்தில் 2004ல் வெளிவந்து ஹிட் ஆன படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த வகையில், செல்வராகவன் படத்தின் பணிகளில் இறங்கி உள்ளார்.
அதிரடி அப்டேட்
இந்த படத்தின் ஷூட்டிங் சத்தமே இல்லாமல் தொடங்கி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. அதன் படி, இப்படத்தின் இரண்டு வார படப்பிடிப்பு மட்டும் தான் மீதம் உள்ளதாகவும், விரைவில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
19 ஆண்டுகளுக்கு பின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
