இரண்டாம் மனைவியை பிரிகிறாரா செல்வராகவன்? ஒரே போட்டோ வெளியிட்டு பதில்
கதை ஆசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர் செல்வராகவன். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தத்துவங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
சர்ச்சை ட்வீட்
இந்நிலையில் செல்வராகவன் சில தினங்கங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதில், " தனியாக தான் வந்தோம். தனியாக தான் போவோம். இதில் நடுவில் எதற்கு துணை?" என்று கூறியிருந்தார். இதனால் நெட்டிசன்கள் செல்வராகவன் கீதாஞ்சலியை விவாகரத்து செய்ய போகிறாரா என கேள்வி எழுப்பி வந்தனர்.
இதைதொடரந்து அவரின் மனைவி கீதாஞ்சலி தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அதில் செல்வராகவன் இல்லை. அதனால் விவாகரத்து உறுதி என்றே நெட்டிசன்கள் பேச தொடங்கிவிட்டனர்.
முற்றுப்புள்ளி
தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் செல்வராகவன்" My Girls, My life" என்று தனது மனைவி மற்றும் மகள் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நாங்கள் பிரியவில்லை என்பதை ஒரு போட்டோவில் எல்லோருக்கும் செல்வராகவன் தெரியப்படுத்திவிட்டார்.
குழந்தை பெறுவதற்கு முந்தைய நாள் நடிகை நமீதா செய்த வேலையை பாருங்க- அவரே வெளியிட்ட வீடியோ