விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்கும் செல்வராகவனுக்கு இத்தனை கோடி சம்பளமா?
விஜய் அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் கமிட்டாகி வருகிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தளபதியின் 65வது படமான இப்படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைத்துள்ளனர். படத்திற்கான வெளிநாட்டில் தொடங்கி சென்னையில் நடந்தது. இப்போது மீண்டும் படக்குழு வெளிநாடு செல்ல இருக்கிறார்கள்.
அங்கு படத்தில் இடம்பெறும் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் செல்வராகவன் நடிக்கிறார் என ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி வந்தது.
தற்போது என்ன விஷயம் என்றால் இப்படத்தில் நடிக்க செல்வராகவனுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.