முதல் முறையாக செல்வராகவனுடன் இணையும் முன்னணி நடிகர்.. யார் தெரியுமா
தமிழ் சினிமாவில் சூப்பர்ஹிட் கூட்டணிகளில் ஒன்று இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணி.
இவர்கள் கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த இவர்கள், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.
இப்படத்துக்கு நானே வருவேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார்.
இந்நிலையில், நானே வருவேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒப்பந்தமாகி உள்ளார்.
ஏற்கனவே தனுஷுடன் கர்ணன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ள யோகிபாபு, செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri