செல்வராகவனுக்கு என்ன பிரச்சனை? இப்படி ஒரு ட்விட் போட்டிருக்காரே
இயக்குனர் செல்வராகவனுக்கு தமிழ் சினிமாவில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை. தற்போது சாணிகாயிதம் என்ற படத்தில் நடிகராகவும் அறிமுகம் ஆகி இருக்கும் அவர் அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மோகன் ஜியின் அடுத்த படத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வந்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது செல்வராகவன் ட்விட்டரில் போட்டிருக்கும் ஒரு பதிவு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
"ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்" என அவர் ட்விட் செய்திருக்கிறார்.
ஏன் இப்படி ஒரு ட்விட் போட்டார். அவரது வீட்டில் என்ன பிரச்சனை என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
MohanG od எதுவும் பிரச்சினையா மாம்ஸ்...
— திராவிட #Beast??❤️ (@iam_thalapathi) December 26, 2021

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu
