இயக்குனர் செல்வராகவனின் மூன்று பிள்ளைகளையும் பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப புகைப்படம்
தமிழ் திரையுலகில் மாறுபட்ட கதைக்களத்துடன் படங்களை இயக்கி, தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன்.
இவர் இயக்கத்தில் தற்போது புதிதாக ஒரு படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக தனுஷ் நடித்து வருகிறார்.
இப்படம் மட்டுமின்றி, விரைவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் 2 படம் உருவாகவிருக்கிறது.
இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது சாணி காயிதம் படத்தின் மூலம் முதன் முறையாக நடிகராகவும் அறிமுகமாக இருக்கிறார்.
இதில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் தனது மூன்றாவது குழந்தையை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்திருந்தார்.
இந்நிலையில் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம்..
