செம்பருத்தி சீரியலுக்கு விழுந்த மிகப்பெரிய அடி - காரணம் இதுதானா, கடுப்பில் ரசிகர்கள்
சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சீரியல்களில் ஒன்றாகும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி.
ஆம் ஜீ தமிழ் தொலைகாட்சிலேயே செம்பருத்தி சீரியல் தான் அதிக TRP வைத்துள்ள சிரியலாக விளங்கி வந்தது.
ஆனால் சில வாரங்களாக Barc இந்திய வெளியிடும் TRP பட்டியலில் டாப் 5 இடத்தை கூட பிடிக்கமுடியாமல் தடுமாறி வருகிறது செம்பருத்தி சீரியல்.
இதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் கொண்டாடி வந்த ஷபானா, கார்த்திக்கின் ஜோடி மாற்றியதால் தான் என்று கூறுகின்றனர்.
ஆம் சில மாதங்களுக்கு முன் செம்பருத்தி சீரியல்களில் இருந்து கதாநாயகன் கார்த்தி வெளியேறினார். இவருக்கு பதிலாக புதிதாக நடிகர் ஒருவர், அதி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
தீடீரென ஜோடி மாற்றப்பட்டதால், சீரியலுக்கு ரசிகர்கள் குறைந்துள்ளதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தான் TRP யில் டாப் இடத்தை பிடிக்கமுடியாமல் செம்பருத்தி சீரியல் தடுமாறி வருகிறதாம்