மோசமான உடையில் செம்பருத்தி சீரியல் நடிகையை வீடியோ எடுத்த நபர் - புகார் அளித்த நடிகை
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் துணை நடிகையாக நடித்து வருபவர் ஜெனிபர்.
நடிகை ஜெனிபருக்கு சில மாதங்களுக்கு முன் தான் சரவணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால் தற்போது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து ஜெனிபர் பிரிந்து வாழ்ந்து வருகிறாராம்.
இந்நிலையில் நடிகை ஜெனிபர் அதிர்ச்சியளிக்கும் வகையில் காவல்துறை அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
" முதல் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும்,சீரியலில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த நவீன் குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் அவர் கூறினார் ".
" நவீன் குமாருக்கு வேலை பறிபோனதால் செலவுக்காக தன்னிடம் 2.5லட்சம் ரூபாய் வரை பணத்தை கடனாக பெற்று கொண்டு, மீண்டும் 5 லட்ச ரூபாய் கடனாக வேண்டும் என கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன்னை அடித்து காரில் ஏற்றி கொண்டு மோசமான உடையில் செல்போனில் வீடியோ எடுத்தார் ".
" மேலும் 5 லட்ச ரூபாய் கடனாக தரவில்லை யென்றால் அரை நிர்வாண வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவிட்டு விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறினார் நடிகை ஜெனிபர் கூறியுள்ளார் ".