பிக்பாஸ் 5வது சீசனில் செம்பருத்தி சீரியல் நடிகையா?- வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
பிக்பாஸ் 5வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சிக்கான செட் எல்லாம் எப்போதோ வடிவமைக்கப்பட்டு விட்டதாம்.
நிகழ்ச்சி குழுவினர் வரும் அக்டோபர் இறுதி வாரத்தில் 5வது சீசனை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்கள், அதற்கு முன் புரொமோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
இதுவரை 2 புரொமோ வந்துவிட்டது, அடுத்தும் சில புரொமோக்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸில் போட்டிபோட இருப்பவர்களின் சில பெயர்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் செம்பருத்தி சீரியலில் முக்கிய ரோலில் நடிக்கும் பிரியா ராமன் சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என்று செய்தி வந்தது.
இப்போது என்னவென்றால் அந்த சீரியலில் இருந்து வெளியேறிய அவர் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.