சன் டிவி-யின் முக்கிய சீரியலில் நடிக்கவுள்ள செம்பருத்தி சீரியல் நடிகை! யார் தெரியுமா?
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் செம்பருத்தி, இந்த தொடர் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலம்.
மேலும் இந்த பிரபல சீரியலில் நடித்து வந்த நடிகை பாரத நாயுடு, இவர் மித்ரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இவர் யாரடி நீ மோகினி மற்றும் தேவதையை கண்டேன் ஆகிய சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
இந்நிலையில் நேற்று முதல் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தாலாட்டு, இந்த சீரியலில் தான் தற்போது பாரத நாயுடு நடிக்கவுள்ளார்.
மேலும் இது குறித்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் "திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு சன் டிவி-யில் தாலாட்டு சீரியலை தவறவிடாதீர்கள். தொடர்ந்து ஆசீர்வதிக்கவும்” என்று கூறியுள்ளார்.