TRP-யில் கடுமையான சரிவை சந்திக்கும் செம்பருத்தி சீரியல், கார்த்திக் ராஜ் விலகியதன் தாக்கம்!
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய தொடர் தான் செம்பருத்தி, இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் இதில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிகை ஷாபனாவும், ஆதி கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் ராஜூம் நடித்து வந்தனர். இவர்களுக்காகவே அந்த சீரியலை பார்த்து வந்த ரசிகர்கள் அதிகம்.
இதனிடையே கார்த்திக் ராஜ் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்து இருந்தார், இதனால் தற்போது ஆதி கதாபாத்திரத்தில் அக்னி என்பவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்பொது 1000 எபிசோடுகளை கடந்துள்ள செம்பருத்தி சீரியல் அந்த சீரியல் குழு அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இதனிடையே TRP யில் தொடர்ந்து டாப் இடத்தில் இருந்து வந்த செம்பருத்தி, கடந்த வாரம் வெளியான TRP பட்டியலில் செம்பருத்தி சீரியல் இடம் பிடிக்கவில்லை.
ஆம், கார்த்தி ராஜ் விலகியதில் இருந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள செம்பருத்தி சீரியல், தற்போது வரவேற்பு குறைந்து மோசமான நிலையில் உள்ளது.