பாலாவ வெளில அனுப்புங்க! கொந்தளித்த பிரபலம்! கடும் எதிர்ப்பு! பொங்கிய ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கி 80 நாட்களுக்கு மேலாகிவிட்டது. கடந்த வாரத்தில் அனிதா வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதே போலவே அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகிவிட்டது. அண்மையில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து பார்த்து விட்டு நலம் விசாரித்து போனார்கள். ஷிவானியின் அம்மா தன் மகளை கடுமையாக கண்டித்தது சர்ச்சையானது. பாலாஜி தானே இதற்கு காரணம் என கண்ணீர் விட்டார்.
ஏற்கனவே கடந்த எபிசோடுகளில் போட்டியாளர்களிடத்தில் கடிந்து நடந்துகொண்ட பாலாஜி மீது புகார் வைக்கப்பட்டது. கமலும் சூசகமாக இதை கேட்டார். இந்நிலையில் ஆரியிடத்தில் பாலாஜி மரியாதை குறைவாக நடந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது.
ஆரியின் ரசிகர்கள் பாலாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாலாஜியை வெளிலே அனுப்புங்க என கூறியுள்ளார்.