சூர்யாவுக்கு ஜோடியாகும் சென்சேஷன் கதாநாயகி.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா
சூர்யா 42
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை திஷா பாட்னி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஏற்கனவே இப்படம் 50% சதவீதத்திற்கும் மேல் படப்பிடிப்பு நடந்துவிட்ட நிலையில் அடுத்ததாக வரலாற்று காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.
சென்சேஷன் கதாநாயகி
இந்நிலையில், வரலாற்று பகுதியில் இடம்பெறும் காட்சிகளில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க வளர்ந்து வரும் இளம் சென்சேஷன் நடிகை மிருணாள் தாகூர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் அடுத்ததாக யாருடன் இணையப்போகிறார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சமயத்தில் சூர்யாவுடன் இவர் ஜோடியாக நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பல கோடிகள் லாபத்தை அள்ளி கொடுத்த துணிவு.. செம மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்