தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் சென்சேஷன் நடிகை.. யார் தெரியுமா
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 66 படம் உருவாகி வருகிறது.
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தை வம்சி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட பலருக்கும் நடிக்கின்றனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம், வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
விஜய்யுடன் நடிக்க ஆசை
இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க பல நடிகர், நடிகைகள் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை லிஜோமோல் ஜோஷ் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளாராம்.
நடிகை லிஜோமோல் ஜோஷ், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த ஜெய் பீம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
